பொறுப்பான பிள்ளை

 பொறுப்பான பிள்ளை.

************************


அடித்து எழுப்பாமலே

அதிகாலையில் தானே

எழுந்த பிள்ளையை பார்த்து 

ஆச்சரியப்பட்டாள் அம்மா


தன்னை பொருட்டாகவே

மதியாதவன் அரைமணி 

நேரமாய் தன் முன்னால்

நிற்பதை கண்டு வியந்தது

நிலைக்கண்ணாடி


சுருட்டிய ஒற்றை நோட்டுடன்

ஓடும் அண்ணன் கையில்

புத்தகங்களா என ஐயம்

எழுந்தது தங்கைக்கு


நீண்ட நாளாய் கேட்டுக்

கொண்டிருந்த சைக்கிளை

பற்றி ஆரம்பித்த அப்பாவிடம்

கடனில் வாங்க வேண்டாம்

பணம் வந்ததும் பார்த்துக்

கொள்ளலாம் என்று சொல்லி

செல்லும் செல்ல மகனை

பெருமையடன் பார்த்தாள்

அம்மா.


பார்த்தீர்களா எவ்வளவு

பொறுப்பாக இருக்கிறான்

என்ற அம்மாவிடம்

ஆமாம் அந்த காலத்தில்

உன்னை முதன்முதலாக

பஸ்ஸில் பார்த்த பின் 

எனக்கும் இப்படிதான் 

பொறுப்பு வந்தது 

என்றார் அப்பா.


(விஞ்ஞானி)





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்