இல்லையேல்

 இல்லையேல்.

***************


பெருகும் விழி நீரை 

நீர் அடித்து கழுவி


நெஞ்சின் தீயை அடக்கி

அடுப்பில் தீயை மூட்டி


ஆறிடா காயம் மறைத்து

காயா காய்கள் வெட்டி


சுட்ட சொற்களை மறந்து 

சுட சுட சோறு வடித்து


எள்ளி நகைத்தார் மகிழ

நகை முகமாய் 

அள்ளி பரிமாறிடின்

மகாலட்சுமி 

இல்லையேல் ....................


(விஞ்ஞானி)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்