ஸ்டிக்கர் பொட்டு
ஸ்டிக்கர் பொட்டு
*******************
அவள் பயன் படுத்துவது
ஆறாம் நம்பர் அடர் சிகப்பு
ஸ்டிக்கர் பொட்டு
அவள் கணவன் சட்டையில
ஒட்டியிருந்தது
நான்காம் நம்பர் கருப்பு
ஸ்டிக்கர் பொட்டு
இரண்டு நாளாக அதுதான்
அவளுக்கு மன உளைச்சல்
அத்துடனே அலுவலகம்
சென்று வந்தவள்
கண்ணாடியில் தன்னை
பார்த்ததும் முகஞ்சுளித்தாள்
ஸ்டிக்கர் பொட்டு எங்கோ
விழுந்திருந்தது
பேருந்து கூட்ட நெரிசலில்
விழுந்திருக்கும் என
நினைத்துக்கொண்டாள்.
எவனோ ஒருத்தன்
மனைவிக்கும் மன உளைச்சல்
வர வாய்ப்பு இருக்கு என்ற
எண்ணம் கூட அவளுக்கு
வரவில்லை
(விஞ்ஞானி)
கருத்துகள்
கருத்துரையிடுக