அப்பா தோள்கள்

 அப்பா தோள்கள்.

*****************

பெருங்கூட்டம் அலை மோதும்

பல ஆண்டுகளுக்கு ஒருமுறை

வரும் குறிப்பிட்ட அந்நாளில்


சாமியை பார்க்க தனது

ஐந்து வயது மகனுடன்

கோவிலுக்கு போய்விட்டு 

வந்த கணவனிடம்

 

தரிசனம் கிடைத்ததா என்று

மனைவி கேட்க

பிள்ளையிடம் சொல்லேண்டா

என்றான் அவன்


சாமிஅலங்காரத்தை 

தீப ஆராதனைகளை

பார்த்ததை பார்த்தப்படியே

மழலை மொழியில்

வர்ணித்தான் பிள்ளை


பார்த்தேன் பார்த்தேன் என்று

சொல்கிறான்

நீங்கள் பார்க்க வில்லையா

என்றாள் மனைவி 


நானும் பார்த்தேன்

முப்பது வருடங்களுக்கு முன்

என் அப்பா தோளின் மீது அமர்ந்து 

என்றான் கணவன்.


(விஞ்ஞானி)


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்