சுதந்திரம்
சுதந்திரம்.
***********
அம்மா பார்த்துக்கொண்டு
இருந்தாள்
வராந்தாவில்
வைக்கப்பட்டிருந்த
தொட்டி செடியையும்
சங்கிலியில் கட்டியிருந்த
வளர்ப்பு நாயையும்
மாறி மாறி தன் குழந்தை
பார்ப்பதை
அம்மா பார்த்துக்கொண்டு
இருந்தாள்
தன் குழந்தை
நாய் தட்டில் நீர் எடுத்து வந்து
செடிக்கு ஊற்றுவதையும்
சங்கிலியை அவிழ்த்து விட்டு
நாயை வீட்டுக்குள்ளே
அழைத்துப்போவதையும்
அம்மா பார்த்துக்கொண்டு
இருந்தாள்
அடுத்த நாள்
தொட்டிச்செடி தோட்டத்துக்கு
போவதையும்
நாய் சங்கிலி பரணுக்கு
போவதையும்.
(விஞ்ஞானி)
கருத்துகள்
கருத்துரையிடுக