மின்னல்

 

மின்னல்.

***********

அடியே ஏகமா மின்னுது

சீக்கரமா கீழே வா

மின்னல பாத்தா கண்ணு

போயிடும்

எனும் குரல் காதில் விழ

சன்னல் வழியே அடுத்த வீட்டு

மொட்டைமாடியை பார்த்தேன்


அந்த வீட்டு பெண் காற்றில்

காய்ந்தாடிய துணிகளை

எடுத்துக்கொண்டிருந்தாள்


உடனே எழுத தொடங்கினேன் 

மின்னல் பார்வையை 

பறித்திடும் என்றால்

இந்த தெருவில் பலருக்கு

பார்வை இருக்க வாய்ப்பில்லை

என்று.


நங் என்று தலையில் ஒரு 

செல்ல குட்டு விழுந்தது


பின்னால் நின்றிருந்த மனைவி

இந்த கறுப்பி உங்களுக்கு

மின்னலா

என்று கேட்டு விட்டு போனாள்.


மனைவி போனதும் கவிதைக்கு

தலைப்பிட்டேன்


"கறுப்பு மின்னல்"

என்று.






 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்