புத்திசாலி கடவுள்
புத்திசாலி கடவுள்.
*******************
ஒருமித்த கருத்துடன்
மணமுறிவுக்காக
விண்ணப்பித்திருக்கும்
அந்த முதியவர்களை
ஆச்சரியமாய் நோக்கினார்
நீதியரசர்.
எங்கள் வாழ்க்கையில்
எங்களிடை இதுவரை
இரு முறைதான் ஒருமித்த
கருத்து இருந்திருக்கிறது
என்றார் கிழவர்.
திருமண சம்மதத்தில்
ஒருமுறை
மணமுறிவு ஒப்புதலில்
மறுமுறை
என்றாள் கிழவி
இடையியினில் எப்பவும்
ஏட்டிக்கு போட்டிதான்
என்றார் கிழவர்.
எத்தனை பிள்ளைகள்
என்று கேட்டார் நீதியரசர்
ஆறு என்றார் கிழவர்
ஆறும் ஆளாயிடுச்சி
என்றாள் கிழவி
வழக்கை ஒத்தி வைத்த
நீதியரசர்
ரூம் போட்டு யோசிச்சி
பாத்துட்டுதான்
உங்கள அந்த கடவுள்
சண்டைக்காரர்களா
படைச்சிருக்கனும் என
நினைத்துக் கொண்டார்.
(விஞ்ஞானி)
கருத்துகள்
கருத்துரையிடுக