நட்சத்திர யோகம்
நட்சத்திர யோகம்.
*****************"
உன் நட்சத்திரத்தின் படி
முன் நகரும் கோள்களாலும்
பின் நகரும் கோள்களாலும்
இன்ன இன்ன விளைவுகளை
சந்திக்க நேரிடும் என்ற
தொலைக்காட்சி சோதிடரின்
ஆருடத்தை அசை போட்டபடி
அன்னாந்து பார்த்தேன
விண்ணிலே எண்ணிலா
விண்மீன்கள் கண்ணிலே
பட்டு மின்மினிகள் போலே
மறைந்தும் மறையாமலும்
தெரிந்தன
இம்மீன்களிலே எந்த மீன்
எந்தன் மீன் என்று சிந்தனை
ஓடுகையில் அனிச்சையாக
உடலில் ஓடிய ஒரு எறும்பை
அடித்து விட்டு பார்த்தேன்
இந்நிலைக்கு ஆளான இந்த
எறும்பின் நட்சத்திரம்
என்னவாக இருக்கும் என்ற
எண்ணம் தோன்றியது
(விஞ்ஞானி)
கருத்துகள்
கருத்துரையிடுக