இல்லம்
இல்லம்.
**********
இருபது வயதினிலே
பொது வழி பொது கிணறு
ஒண்டுக் குடித்தனம்
குடக்கூலிக்கு
நாற்பது வயதினிலே
தனி வீடு தனி கிணறு
கிணற்றடியில் வாழை
வீட்டைச் சுற்றி தென்னை
கனவு இல்லம் சொந்தத்தில்.
எழுபது வயதினிலே
தனிவீடு ஆறு வீடானது
அதில் ஒரு வீடும் பணமும்
இவனுக்கு உரியதானது
பொது வழி பொது கிணறு
நவீன ஒண்டுக்குடித்தனம்
சொந்தத்தில்
(விஞ்ஞானி)
கருத்துகள்
கருத்துரையிடுக