பேராசை
பேராசை.
***********
தலைமாட்டில் செருப்புகள்
கிடக்கும்
என்று சொல்வதையும்
கேட்காமல்
நிலைவாசல் அருகில்
சுவரோரம் தன்
கட்டிலை
போட்டுக்கொண்டாள்
பாட்டி
வீட்டு மனிதர்கள்
செருப்பை
மாட்டிக்கொள்ளும்
போதும்
கழட்டி போடும்
போதும்
அவர்கள் முகத்தை
அருகில்
அடிக்கடி பார்க்கலாம்
ஓரிரு வார்த்தைகள்
பேசலாம்
என்ற ஆசையில்
(விஞ்ஞானி)
கருத்துகள்
கருத்துரையிடுக