நியாயங்கள்

 

நியாயங்கள்.

*************************


காலை செருப்புக் காலால்

மிதித்து விட்டு செல்வதை

மன்னித்து இருப்பேன்

ஆனால் முடியவில்லை.

அந்த செருப்பை வாங்கி

தந்தது நான்


பாதி பாதையில் கையை 

உதறி விட்டு செல்வதை

மதியாது விட்டிருப்பேன்

ஆனால் முடியவில்லை.

கையை பிடித்து அதுவரை அழைத்து வந்தது நான்


அன்பை துறந்து மறத்தலை 

கடந்து சென்றிருப்பேன்

ஆனால் முடியவில்லை.

அன்புக்கு ஒரு முகம் என்று

நம்பி இருந்தது நான்


ஈதெல்லாம் நியாயமா என்று

காயம் செய்தவனை சந்தித்த 

போது கேட்க நினைத்தேன்

கேட்கும் முன்

அவன் இவை யாவும்

தனக்கு நிகழ்ந்ததாய் 

சொல்லி வருந்துகி

ன்றான்.


(விஞ்ஞானி)








கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்