இடுக்கண் நகுதல்
இடுக்கண் நகுதல்.
*****************************
உடல் சூடாக இருக்கிறதே
என்றாள்.
உள்ளத்துள் தகிக்கும்
தீக்கங்குகளின் தாக்கமாய்
இருக்கும் என்றான்
என் கையில் தெறித்து
விழுந்த உங்கள் கண்ணீர்
சுடுகிறது என்றாள்
உலகில் பெரும்பாலான
கோடிக்கணக்கான
மனிதர்களின் நிலை
இதுதான் என்றான்
பூமி வெப்பமயமாதல்
இதனால் தானோ
என்னவோ என்றாள்.
(விஞ்ஞானி)
கருத்துகள்
கருத்துரையிடுக