பயன்படு பொருள்.
பயன்படு பொருள்.
********************
உருப்படமாட்டாய் என்று
புலம்பிய பெற்றோர் போல்
இல்லாது
உதவாக்கரை என்று தினமும்
திட்டிய ஆசிரியர்கள் போல்
அல்லாது
உபயோகமற்றவன் என்று
எண்ணிய மனைவி மக்கள்
போல நினைக்காது
வா தாத்தா வாவென்று
மழலை மாறாத குரலில்
வாய் நிறைய அழைத்து
விளையாடும் பேரன்
பேத்தியுடன் இருக்கும்
சந்தோஷமான தருணத்தில்
பிறக்கும் போதே தாத்தாவாக
பிறந்திருக்கலாமோ என்ற
எண்ணம் பிறக்கிறது.
(விஞ்ஞானி)
கருத்துகள்
கருத்துரையிடுக