சிறார் கடிதங்கள்.

 சிறார் கடிதங்கள்.

*******************

கடவுளுக்கு கடிதம்

எழுதி விட்டு அவருடைய

மின்னஞ்சல் முகவரியை 

கேட்ட பேரனுக்கு 

நண்பரின் மின்னஞ்சல்

முகவரியை தந்த தாத்தா


அந்த நண்பருக்கு அதை

தெரியபடுத்தி விட்ட

பக்குவமாய் பதிலளிக்க

சொன்னார் ஒரு கடவுளாக

தன்னை நினைத்துக்கொண்டு.


நண்பர் சிரித்தபடி சொன்னார்

நானும் என் பேரன் கேட்டதால்

 உன் மின்னஞ்சல் முகவரியை

 அவனிடம் கொடுத்துள்ளேன்


அவன் திட்டி அனுப்பும்

கடிதத்திற்கு நீயும் 

பக்குவமாய் கோபமின்றி

பதிலனுப்பு ஒரு சாத்தானாக

உன்னை பாவித்து கொண்டு

என்று.


(விஞ்ஞானி)






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்