சுற்றும் முற்றும்.
சுற்றும் முற்றும்.
*****************
சுற்றிலும் மனிதர்கள்
முற்றிலும் எவருக்கும்
என்னை தெரியவில்லை
சுற்றிலும் உறவுகள்
முற்றிலும் எவருக்கும்
என் குரல் கேட்கவில்லை
சுற்றிலும் சொந்தங்கள்
முற்றிலும் எவருக்கும்
என் உணர்வு புரியவில்லை
சுற்றிலும் பந்தங்கள்
முற்றிலும் எவருக்கும்
என் மீதில் பற்று இல்லை
சுற்றிலும் தேடி பார்த்து
முற்றிலும் தென்படாத
ஒருவனிடம்
ஏனிந்த நிலையென்று
கேட்க நினைக்கிறேன்
சுற்றி உள்ளவர்களில்
எவருக்கேனும் நான்
தென்பட்டால்
எவருக்கேனும் என்
குரல் கேட்டால்
சொல்லுக்கள்
முற்றிலும் உள்ள
வன் எங்கேயென்று.
(விஞ்ஞானி)
கருத்துகள்
கருத்துரையிடுக