விழிகள்

 விழிகள்.

**********

ஒரு ருபாய் இரண்டு ரூபாய் என்று

உண்ணும் அளவிற்கு விழும் காசு

உடை வாங்கும் அளவிற்கு

விழுமா என்ற ஏக்கத்தோடு

அடிக்கடி தன் தட்டை பார்க்கும் 

விழிகள்


காசு போடும் மனிதர்களிடை

ஒரு சில துச்சாதன விழிகள் 

ஒட்டடையாய் நைந்து உடலில்

ஒட்டியிருக்கும் உடையில்

ஊடுருவி மேய்வதையும்

அறிந்தே இருந்தன

அந்த விழிகள் 


ஆனாலும் அவற்றுக்கிடையே

பேகனாய் போர்த்திவிடும்

கருணை விழிகளுக்காய்

காத்து கிடக்கின்றன

அவள் விழிகள்


(விஞ்ஞானி)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்