இளங்கன்று

 இளங்கன்று.

*********************


பாழும் கிணற்றில் 

விழுந்த பந்தை

எடுக்க முனைந்த சிறாரை

தடுத்த பெரியவர் அதில்

உயிர் பறிக்கும் ஜந்துக்களும்

விஷ வாயுக்களும் 

இருக்கக்கூடும் என்று கூறி

புது பந்துக்கான காசை தர

சிறுவர்கள் ஆனந்தமாய்

கடையை நோக்கி ஓடினர்.


மறுநாள் அந்த இடத்தை

அவர் கடந்து செல்கையில்

சிறுவர்கள் இரண்டு

பந்துக்களுடன் விளையாடிக்

கொண்டிருந்தனர்.


(விஞ்ஞானி)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்