க்ரீச்சொலி

 க்ரீச்சொலி

*************

நடமாட்டம் அதிகம் இல்லாத அந்த பெரியவருக்கு 

அவரது குடும்பத்துடன் கலந்திருக்க

வீட்டின் முகப்பில் உள்ள இரும்புக் கதவில் எழும்

க்ரீச் எனும் ஒலி பெரிதும் உதவியது


காலையில் பால்காரனில் தொடங்கி நாள் முழுதும் 

வருவது யார் போவது யார் என்பதை இவரிடம் வந்து

அந்த க்ரீச்சொலி சொல்லி விடும்


ஒருநாள் க்ரீச்சொலி கேட்கவில்லை அவருக்கு 

கூட்டத்தில் தொலைந்து போனதுபோல் இருந்தது

தவிப்புடன் மனைவியை கேட்டார் 

கதவுக்கு எண்ணெய் போட்டு இருக்கா என்று.


ஆமாம் உங்களுக்கு சத்தம் கஷ்டமா இருக்கு 

தூக்கத்துல தூக்கி வாரி போடுதுன்னு

நாந்தான் புள்ளைகிட்ட எண்ணெய் போட சொன்னேன்

என்றாள் அவரது தர்மபத்தினி.


(விஞ்ஞானி)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்