அப்படி போடு அருவாள
அப்படி போடு அருவாள.
************************
கோபுர குடியிருப்பில்
ஆகாய கூட்டில்
ஒட்ட முடியாமல்
பொழுதை ஓட்டிக்கொண்டு இருந்த அந்த பாட்டி
பரிச்சயமான பல்லி சத்தம்
கேட்டதும் சுறுசுறுப்பானாள்
பல்லி கத்திய திசையை
வச்சுத்தான் நல்லது கெட்டது சொல்லுவாங்க எங்கிருந்து
கத்துது என்று தேடியவளிடம்
அது பல்லி சத்தமில்லை
சுவர் கடிகாரம் பல்லியை போல எழுப்பும் ஓசை என்றனர் பிள்ளைகள்.
கடிகாரத்தையே சிறிது நேரம்
பார்த்துக்கொண்டிருந்த பாட்டி
இதை கழட்டி எதிர் திசையில்
மாட்டிடுங்க இப்ப இது இருக்கற
திசையிலிருந்து பல்லி சத்தம்
வரக்கூடாது என்
றாள்.
(விஞ்ஞானி)
கருத்துகள்
கருத்துரையிடுக