கற்பனையோட்டம்

 கற்பனையோட்டம்

********************

சுற்றி சுற்றி வந்தேன்

இருட்டில் இல்லை 

பகலில் தான்

முதலும் முடிவும்

பிடிபடவில்லை 


சுற்றி சுற்றி வந்தேன் 

காட்டில் இல்லை 

ஊரில் தான்

முதலும் முடிவும் 

பிடிபடவில்லை


சுற்றி சுற்றி வந்தேன் 

தெருவில் இல்லை 

வீட்டில் தான்

முதலும் முடிவும் 

பிடிபடவில்லை


சுற்றி சுற்றி வந்தேன் 

கனவில் இல்லை 

மனதில் தான்

முதலும் முடிவும் 

பிடிபடவில்லை


சரி விடு என தெரிந்த வரை

எழுதி வைத்தேன்

கவிதை என்று இதை.


(விஞ்ஞானி)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்