போர் முடியும் நாள்.
போர் முடியும் நாள்.
*********************
போர் எப்பொழுது தொடங்கியது
சுதந்திரம் வந்த பின்பா
அந்நியர் ஆட்சியிலா
மொகலாயர் படையெடுப்பிலா
மூவேந்தர் மோதலிலா
மௌரியர் குப்தர் காலத்திலா
இராமன் ராஜ்ஜியத்திலா
கிருஷ்ணன் அவதாரத்திலா
ஆதி மனிதன் ஆதிக்கத்திலா
மிருகமாய் இருந்த போதிலா
தொடக்கம் தெரியவில்லை
ஆனால் முடிவு...
நிச்சயம்
மனித இனம் முற்றிலுமாய்
அழிகின்ற நாளில்
போர் முடிந்துவிடும்.
விஞ்ஞானி)
கருத்துகள்
கருத்துரையிடுக