குறையொன்றுமில்லை
குறையொன்றுமில்லை..
*****************************
விண்ணிலிருந்து நீர் துளி
கையில் விழுந்து தெறிக்க
உடல் சிலிர்த்தது
இன்னும் வேண்டும்
இன்னும் வேண்டும்
என மனம் நினைக்க
அவளிரு கரங்களும்
விரிந்தன
விண்ணை நோக்கி.
கண்ணிலிருந்து நீர் துளி
கையில் விழுந்து தெறிக்க
உள்ளம் வலித்தது
என்ன வேண்டும்
என்ன வேண்டும்
என மனம் பதைக்க
அவளிரு கரங்களும்
விரைந்தன
மகனை நோக்கி
நீர் துளிகள் யாதென
அன்னை அறிய
பார்வை எதற்கு.
(விஞ்ஞானி)
கருத்துகள்
கருத்துரையிடுக