கரிசனம்

 கரிசனம்.

****************

மருத்துவர் அனுமதியுடன்

பிரசவ அறையில்

மகன் பிறந்த போது

உடனிருந்த கணவனை


அறைக்கு வந்த பின்

சுற்றி நிற்கும் சொந்தங்கள் 

நடுவே காணாது 

எங்கே அவர் என்று கேட்டாள்


அவர் அவரது அம்மாவை

அழைத்து வர அவசரமாய்

அந்த அம்மா வீட்டுக்கு

ஓடியிருக்கிறார்

என்ன திடீர் கரிசனமோ

என்று பதில் வந்தது 


தான் பெற்ற மகனை 

உற்று பார்த்த அந்த 

புது தாய்க்கு புரிந்தது

புன்னகைத்தாள்.


(விஞ்ஞானி)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்