மைனர் தாத்தா.
மைனர் தாத்தா.
*********************
மைனர் புறப்பட்டாச்சு
கிண்டலாய் குரல் கேட்டது
காதில் வாங்காது
பெரியவர் புறப்பட்டார்
காலையில் ரயிலடியில்
யாருடனாவது பேசியபடி
வண்டிகள் வந்து போகும்
வரையிலும்
மதிய உணவுக்கு பின்
ஏரிக்கரை வண்டிப் பாதை
அருகே மரத்தடி மேடையில்
அரை தூக்கத்திலும்
மாலை முழுவதும் பேருந்து
நிலையத்தில் டீக்கடை
பெஞ்சில் பழைய தினசரி
செய்தி தாள்களை
புரட்டியபடியும்
இரவு திண்ணையில்
தன் வயது கிழங்களுடன்
அரட்டை அடித்துக்கொண்டும்
எப்பவோ ஓடி போன
பிள்ளை திரும்பி வத்தால்
இடம் தெரியாமல் தவிக்க
கூடாது என்ற எண்ணத்தில்
அங்கும் இங்கும் இருந்து
காத்திருக்கும் கண்களுடன்
ஒவ்வொரு நாளையும்
கழிக்கின்றார்
மைனர் தாத்தா.
(விஞ்ஞானி)
கருத்துகள்
கருத்துரையிடுக