கள யதார்த்தம்.

 கள யதார்த்தம்.

****************


மெத்து மெத்து என்று

அவளுக்கு மட்டுமே 

பரிச்சயமான 

சன்னமான காலடி சத்தம்

வாசலருகே கேட்க 

முப்பது வருடங்கள் மனம்

 பின்னோக்கி ஓட

வாசலை நோக்கி ஓடினாள்

அங்கே ஒரு பூனை சென்று 

கொண்டிருந்தது


அவள் தன் உணர்வில்

இருந்து மீளும்‌ முன்

தரையில் செருப்பு உரசும் 

ஓசை முன்னே வர பின்னே

வந்து கொண்டு இருந்தான்

அவள் மகன்.


தன்னையே பார்த்தப்படி 

நிற்கும் அம்மாவை தாண்டி

செல்லும்போது 

ஒரு நொடி நின்று

என்னாச்சி மறுபடியும்

சண்டையா என்று சற்று

எரிச்சலுடன் கேட்டு விட்டு

உள்ளே போனான்


(விஞ்ஞானி)













கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்