புறங்கூற்று
புறங்கூற்று.
*************
புற வாசல் வழியே
பூனை போல் வந்து
ஓசையின்றி ஓதிய
சாத்தான் சொல் கேட்டு
சாத்திடின் தெருக்கதவை
தேடி வரும் தேவன்
திறவாத தெருவாசல் கண்டு
திரும்பி போகக் கூடும்
உறவு ஒட்டாது
தாழ் போடும் அன்பு
பாழாகும் பெயர்
வள்ளுவரும்
பட்டு தான் எழுதினாரோ
புறங்கூற்றை கடிந்தொரு
அதிகாரம்.
(விஞ்ஞானி)
கருத்துகள்
கருத்துரையிடுக