ராசி. ****** மொட்டை மாடி சுவற்றின் வெடிப்பில் ஒரு ஆலமரம் தானாக வளருது குழி வெட்டி உரம் போட்டு விதைத்த விதை தலையை காட்ட மறுக்குது வேண்டாத வழி தடத்து பேருந்துகள் வரிசையாக வந்து நின்று போகுது காலோடிய காக்க வைத்து வாராது வந்த பேருந்து நிற்காது கடந்து போகுது தேநீர் கடையில் வாங்கி கைத்தவற விட்ட வடையை தின்ற நாய் வாலை ஆட்டுது ஏழரைக்கு வச்ச சோற்றை ஏளனமாக பார்த்த காக்கா அடுத்த வீட்டு சோற்றுக்கு ஆளா பறக்குது. கூடையில கொய்யாப்பழம் தினமும் கொண்டு வரும் கிழவி அதில் முதல் பழத்த என்னிடத்தில் விற்குது முதல் போணி நான் செய்தால் அமோக வியாபாரம் ஆகுமென அந்த கிழவி மட்டும் நம்புது (விஞ்ஞானி)
கருத்துகள்
கருத்துரையிடுக