கதைகள்
ரூபி நல்ல வளர்த்தியான நாய்
அந்த குடும்பத்தில் ஒரு உறுப்பினராகவே இருந்தது
ஒருநாள்,
விடாது குரைத்து கொண்டிருந்தது
வீட்டில் இருந்தவர்கள் என்னவேன்று பார்த்தபோது
அவர்கள் தோட்டத்தில் ஓங்கி
வளர்ந்து நிற்கும் மரத்தை பார்த்து குரைத்த
படி இருந்தது.
என்னவென்று புரியாமல்
மரத்தை சுற்றி சுற்றி
பார்த்தனர் ஒன்றும் தெரியவில்லை
ரூபியோ குரைப்பதை நிறுத்தவேவில்லை
சங்கிலியை மாட்டி வீட்டிற்குள்
அழைத்து செல்ல முயன்ற
போது வர மறுத்து இன்னும்
அதிக சத்தமாக குரைத்தது.
அக்கம் பக்கத்தினர் கூடி விட்டனர்
சிலர் பாம்பு மரத்தில் ஏறி இருக்கும்
என்றார்கள்
வேறு சிலர் வனவிலங்கு ஒளிந்திருங்கலாம் என்றார்கள்
சிலர் பேயை பார்த்திருக்கும் என்றார்கள்
ரூபியோ விடாது குரைத்து கொண்டிருந்தது.
வனத்துரை உதவியாளரை வரவழைத்தனர். அவரும் மரத்தில் ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டார்.
அக்கம் பக்கத்தினர் எரிச்சல்
பட வேறு வழியின்றி வளர்ப்பு பிராணிகள் காப்பகத்திற்கு
தெரிவித்தனர்
காப்பகத்தில் இருந்து வந்தவர்கள் சோதனைக்கு பின் ரூபியை காப்பகத்துக்கு அழைத்து சென்று விட்டனர்
மாலை பள்ளியிலிருந்து திரும்பிய அவர்கள் பிள்ளை
ரூபியை பார்க்க அடம்பிடிக்க
அனைவரும் கிளம்பி சென்றனர்
காப்பகத்தில் ரூபியை விட்டு
விட்டு வர மறுத்த பிள்ளையை
சமாதான படுத்தி வீட்டுக்கு
திரும்பிய அவர்கள்
அதிர்ச்சியில் உறைந்தனர்.
அக்கம் பக்கத்தினர் பரபரப்புடன்
நின்றிருக்க
அவர்கள் வீட்டின் மேல் அந்த
மரம் சாய்ந்து கிடந்தது
வீடு இடிந்து கிடந்தது..
கருத்துகள்
கருத்துரையிடுக